திடீர் வெள்ளம் – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிவகுமார் உதவி!!

பத்துகாஜா,மார்ச்27: திடீர் வெள்ளத்தால் டேசா சங்காட் பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி அக்குடும்பத்திற்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் நிதியுதவியும் செய்தார்.

திடீர் வெள்ளத்தால் அக்குடும்பத்தின் வீடு பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.அவர்களின் உடமைகளும் சேதமடைந்ததாக செய்தியாளர்களிடம் கூறிய சிவகுமார் இதனால் அக்குடும்பம் பெரும் இழப்பினை எதிர்நோக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,இச்சிக்கலுக்கு முறையான நீரோட்டம் இல்லாமையும் கால்வாய் அடைப்பும் தான் காரணம் எனவும் விவரித்த அவர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி மன்றம் உட்பட சம்மதப்பட்ட இலாகாவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,வட்டார கவுன்சிலர்கள்,கிராமத்து தலைவர்களிடமும் இவ்விவகாரம் குறித்து அணுக்கமாக கண்டறிந்து இனி வருங்காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் பணித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் சிக்கல்களை தீர்க்கவும் அவர்களுக்கு தேவையானதை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளவும் தாம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சிவகுமார் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles