
கோலாலம்பூர் மார்ச் 28-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதது என்ற முடிவு சுயாதீனமாக எடுக்கப்பட்டது என்று ஜேக்கல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கூட்டாட்சி பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபாவின் தலையீட்டால் அல்ல என்றும் ஜேக்கல் டிரேடிங் தெளிவுபடுத்தியது.
இந்த விஷயத்தின் சட்ட மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த தனது கருத்துக்களை மட்டுமே டாக்டர் ஹலேஹா பகிர்ந்து கொண்டதாகவும், அதன் நிர்வாக இயக்குநரின் உரையை தவறாகப் புரிந்துகொண்டவர்களை அல்லது தேர்ந்தெடுத்துப் பகிர்ந்து கொண்டவர்களை விமர்சித்ததாகவும் நிறுவனம் விளக்கியது.
இது தவறான புரிதல்களுக்கு வழிவகுத்தது என்று ஜேக்கல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று காலை மடானி மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு ஜேக்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமட் பாரோஸ் முகமட் பேசியதை தெளிவு படுத்தி இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
அமைச்சர் டாக்டர் ஹலேஹாவால் கோவில் மீது வழக்குத் தொடர நிறுவனம் தடுத்ததாக பாரோஸ் கூறியிருந்தார்.
இது சில தரப்பினரின் கோபத்தை அமைச்சரின் மீது செலுத்தியது.
“எங்கள் குடும்பத்திற்கும் பரந்த சமூகத்திற்கும் மிகவும் அர்த்தமுள்ள ஒரு முயற்சியான மஸ்ஜித் மடானியின் கட்டுமானத்தை எளிதாக்குவதிலும், அதை நிறைவேற்றுவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தபோது, அவர் மீது பழி சுமத்துவது நியாயமற்றது என்று ஜேக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

