

தாப்பா ஏப்ரல் 21-
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.
கடந்த வாரம் வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் பிபிபி கட்சியின் தலைவர்கள் ஆயர் கூனிங்கில் களம் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நேற்று பேராக் மாநில பிபிபி நடத்திய பிரச்சாரத்தில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, பேராக் மாநில தலைவர் டத்தோ லீ ஹாங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் டாக்டர் யுஸ்ரி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற பிபிபி கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாக டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.