
ஷா ஆலம், ஏப்ரல் 22-
இன்று நான் மீண்டும் மக்களுடன் உறுதியாக நிற்கிறேன் காரணம் நான் மக்களுக்காக மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவன் என்பதனால், நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மூன்றாம் தரப்பினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தது மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
மக்களுக்கான எனது முயற்சிகளையும் கடின உழைப்பையும் அவதூறுகளால் களங்கப்படுத்த முயற்சிக்கும்போது நான் அமைதியாக இருக்க மாட்டேன்.
நான் களத்திற்குச் சென்று, மக்களின் புகார்களைக் கேட்டு, நடவடிக்கை எடுத்தேன் என்பதை இது நிரூபிக்கிறது –
வெறும் தூரத்திலிருந்து பேசவில்லை அரசியல் ஆதாயதிற்காக பேசவில்லை.
இது கட்சி சார்ந்த விஷயம் அல்ல, கொள்கை சார்ந்த விஷயம். நான் தொடர்ந்து மக்களுடன் நின்று பொது நலனுக்காகப் போராடுவேன்.
எனது முயற்சிகள் பாராட்டப்படுவதற்காக அல்ல, மாறாக மக்களின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கே என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் அவர்கள் தாமான் ஸ்ரீ மூடா வெள்ளப்பிரச்சனை தொடர்ப்பில் வெளியிட்ட முகநூல் செய்தியில் காட்டமாக குறிப்பிட்டார்.

