காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கண்டனம்!

புத்ராஜெயா: ஏப்ரல் 25-
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இது ஒரு திட்டமிடப்பட்ட, மனிதாபிமானமற்ற தாக்குதல் என்று அவர் சாடினார்.

பாதிக்கப்பட்டவர் கொல்லப்படுவதற்கு முன்பு வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அத்தகைய கொடுமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சொன்னார்.

அனைத்து மலேசியர்களின் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறோம் என்று அவர் வெளியிட்ட முகநூல்பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles