
டெல்லி: தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த ராணுவ நடவடிக்கை பெருமை அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

