தெலுக் இந்தானில் கோர விபத்தில் எட்டு FRU அதிகாரிகள் மரணம்!

தெலுக் இந்தான், மே 13-
இன்று காலையில் FRU அதிகாரிகளை ஏற்றி சென்ற வாகனம் ஒன்று கனரக லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு FRU அதிகாரிகள் பலியாகினர் .அதேசமயம் வேளையில் லோரி ஓட்டுநரும் மரணமடைந்தார்.

நெஞ்சை உலுக்கிய இந்த துயர சம்பவம் தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் சிக்குஸ்- சுங்கை லம்பாம் எனும் பகுதியில் நிகழ்ந்தது

இந்த விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைகாக தெலுக் இந்தான் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டனர்.

காலை 8.54 மணிக்கு தங்கள் தரப்புக்கு விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாகவும் இதுவரை எட்டு FRU அதிகாரிகள் பலியானதாக பேராக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் சயானி சைடோன் கூறினார்.

OP CHARIOT நடவடிக்கையை முடித்துக் கொண்டு அவர்கள் ஈப்போவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிகிறது.

விபத்தில் பலியான எட்டு பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles