
ஆலய விழாக் காலங்களில் விழாவிற்கு வருகை புரியும் தாய்மார்கள் பலர் தாலிக்கொடிகள் மற்றும் தங்கச் சங்களிகளை பறிக்கொடுக்கும் சம்பவம் கவலை அளிப்பதாக
சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.
சித்தியாவானில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் கோப்பெங்கில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆலய கும்பாபிஷேக விழாவில் மொத்தம் 10 மகளிர்கள தாலிக்கொடி மற்றும் தங்கச் சங்கிளிகளை பறிக்கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அதிகரித்து வருவதால் இந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ஆலயங்களில் ரகசிய காமிராக்களை பொருத்துமாறு அவர் ஆலோசனை வழங்கினார்

தெலுக் இந்தான் நகரில் அமைந்துள்ள அருள் மிகு முருகன் ஆலயத்தில் சித்ரா பௌணர்மி விழாவில் கலந்துக்கொண்டப பின்னர் இவ்வாறு பேசினார்
இந்த ஆலயத்தில சித்திரா பௌர்னமி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது
இன்று பொது விடுமுறையானதால் வழக்கத்திற்கு மாறாக ஆயிரகணக்காண பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை புரிந்தனர்.
பக்தரகள் காவடிகள் சுமந்தும் அலகு குத்தியும் , முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

