அகத்தியர் பெருமானின் அகத்தியர் வேதம் நூல் தமிழ் – ஆங்கில மொழியில் வெளியீடு கண்டது!

கோலாலம்பூர் மே 12-
அகத்தியர் பெருமானின் புகழ் பாடும் அகத்தியர் வேதம் நூல் இன்று தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியீடு கண்டது.

பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெற்ற அகத்தியர் வேதம் நூல் வெளியீட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த அகத்தியர் தாசன் மருத்துவர் வி.எம். ஜெயபாலன் எழுதியிருக்கும் அகத்தியர் வேதம் நூல் 366 பக்கங்களை உள்ளடக்கியது.

அகத்தியர் தொண்டன் முத்துசாமி குடும்பத்தினர் இந்த நூலை வெளியிடு செய்தனர்.

சித்தர்கள், முனிவர்கள் வரிசையில் தலையாயவரும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் உரியவருமான அகத்தியப் பெருமான், பொதிகைமுனி, கும்பமுனி, தமிழ் முனிவன் என்கின்ற பல்வேறு திருநாமங்களால் போற்றப்படுகிறார்.

உலக சமத்துவத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அகத்தியர் ஆவார் .

இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அகத்தியர் அருள் ஞான சபை தலைவர் எஸ் பக்தவத்சலம், ஸ்டார் மணியம், சவரிமுத்து, பிரிண்டர் ராமா, பொன் ரெங்கம், டத்தோ கலைவாணர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles