தஞ்சை வசந்தம் லையன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக விவேகானந்தர் நியமனம்!

கோலாலம்பூர் மே 12-
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர் வசந்தம் லையன்ஸ் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு பதவியேற்பு விழா இன்று கோலாலம்பூர் ரிகல் பார்க் ஹோட்டலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் வசந்தம் லையன்ஸ் சங்கத்தின் காப்பாளர் டத்தோ டி. மோகன் இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் வசந்தம் லையன்ஸ் சங்கத்தின் நடப்பு தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூர் வசந்தம் லையன்ஸ் சங்கத்தின் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு மலேசியாவில் இந்த விழா நடைபெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சம்பத் தெரிவித்தார்.

இதனிடையே இன்று நடைபெற்ற நிகழ்வில் தஞ்சாவூர் வசந்தம் லையன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக விவேகானந்தர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles