ஜொகூர் மாநில இடைநிலைப்பள்ளிகளுக்கான கபடிப்போட்டி

மே 3 ஆம் திகதி சனிக்கிழமை அன்று ஜோகூர் மாநில கபடிச் சங்கமும்
மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து ஜொகூர் மாநில இடைநிலைப்பள்ளிகளுக்கான கபடிப்போட்டி(ஆண்கள் பிரிவு) ஒன்று மிகவும் விமரிசையாக இளைஞர் மற்றும் விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் ஜொகூர் மாநிலத்திலிருந்துப் பன்னிரண்டு குழுக்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் நிலையில் டத்தோ ஜப்பார் இடைநிலைப்பள்ளியும், இரண்டாம் நிலையில் கெலாங் பாத்தா இடைநிலைப்பள்ளியும், மூன்றாம் நிலையில் தாமான் யுனிவர்சித்தி, நான்காம் நிலையில் டத்தோ பெங்காவா திமோர் இடைநிலைப்பள்ளி வாகை சூடியது.

இப்போட்டியில் திரு ரமேஷ்ராஜ் முருகன், ஆசிரியர் திரு நரசிம்மன், ஆசிரியர் கினிஷா,ஆசிரியர் சேகர் அவர்களுக்கும் மாணவர்களைப் பயிற்றுவித்த அனைவருக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் ஜொகூர் கபடிச் சங்கத்தின் தலைவர் திரு மு. சந்திரன் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நடுவர் பணியை மிகவும் சிறப்பாக ஆற்றிய ஆசிரியர் திரு பிரகாஸ், திருமதி மீனு மோகன்
ஜோகூர் மாநில கபடிச் சங்கத்தின் தலைவர் திரு சந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற பெற்றோர்களின் ஒத்துழைப்பை ஜோகூர் மாநில கபடிச் சங்கத்தின் தலைவருமான திரு சந்திரன் அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் கபடிக்கழகத்தையும் கபடி மாணவர்களையும் உருவாக்குவதைப் பள்ளி ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என அவர் தெரிவித்துக் கொண்டார். மேலும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்கமூட்டி இவ்வாறான போட்டிகளில் பங்கெடுக்க சிறுவயதிலிருந்தே முனைப்புக் காட்ட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles