பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் மே 12-
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 18 ஆம் ஆண்டு அகத்தியர் பெருமானின் குருபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

காலை 7.00 மணி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் கள் ஏந்தி காணிக்கை செலுத்தினர்.

மகேஸ்வர பூசை க்கு பிறகு 500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஆசான் மகாரிசி அகத்தியரின் 18 ஆம் ஆண்டு குரு பூஜையானது சித்த ரிசி கணங்களின் ஆசியோடும் அவர்களின் வழி நடத்தலோடு இனிதே நடைபெற்றது.
என்று ஏற்பாட்டுக் குழு தலைவரும் அகத்தியர் அருள் ஞான சபைத் தலைவருமான எஸ்.பக்தவச்சலம் தெரிவித்தார்.

இவ்வாண்டு அகத்தியர் குரு பூஜை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles