13ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்! சார்லஸ் சந்தியாகோ வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, மே 11-
13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை மடானி அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 13 ஆவது மலேசிய திட்டம் இந்திய சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

தேசிய நீரோட்டத்தில் ஒருபோதும் இந்திய சமுதாயம் பின் தங்கி விடாமல் இருக்க சமுதாயத்தின் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.

கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உட்பட அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் எதிர் நோக்கி உள்ள பிரச்சனைகளுக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அப்போது தான் இந்திய சமுதாயத்தின் ஆதரவு எப்போதும் கிட்டும் என்று அவர் சொன்னார்.

பிரதமர் துறை அமைச்சின் ஏற்பாட்டில் இன்று பெட்டாலிங் ஜெயா ஹர்மடா தங்கும் விடுதியில் 13 ஆவது மலேசிய திட்டமும் இந்திய சமுதாயமும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சார்லஸ் சந்தியாகோ இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் தொட்டு விரிவாக எடுத்துரைத்தார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நூருல் இஸா அன்வார் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles