


கோலாலம்பூர் மே 11-
மலேசிய திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஜாலான் மஸ்ஜித் இந்திய தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் 132 ஆம் ஆண்டு கோவில் திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பின்னர் பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் கரகங்கள் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.
பிற்பகலில் மகேஷ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
ஆலயத் தலைவர் டாக்டர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.