தமிழ் மொழி வாழ வேண்டும் என்றால் செய்தியாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் -டத்தோஸ்ரீ ராஜூ

செபெராங் பிறை, மே 16-
இந்த நாட்டில் தொடர்ந்து தமிழ் மொழி நீடித்திருக்க தமிழ் பத்திரிகை செய்தியாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ கேட்டுக் கொண்டார்.

தமிழ் மொழி ஒரு இனத்தின் அடையாளம்.
நாம் எல்லோரும் தமிழர்கள்.

அந்த வகையில் இந்த நாட்டில் தமிழ் மொழி மென்மேலும் சிறக்க தமிழ் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து மொழிக்காக சேவையாற்ற வேண்டும்.

தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் எப்போதும் பக்கப்பலமாக இருப்போம் என்று அவர் சொன்னார்.

வட மலேசிய தமிழ் பத்திரிகையாளர் – நிருபர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் சடையன் ஏற்பாட்டில் நடைபெற்ற விருதளிப்பு விழாவுக்கு தலைமை ஏற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ராஜூ தொடர்ந்து தமது உரையில்
சமூகத்தின் ஒலி நாதம் செய்தியாக வெளிப்படுகிறது. அந்த ஒலியை பதிவு செய்யும் தமிழ்ச் செய்தியாளர்கள், மலேசியாவில் தினசரி வாழ்க்கையின் நுணுக்கங்களுடன் போராடும் வீரர்கள்.

செய்தி என்பது ஒரு தகவல் மட்டுமல்ல; அது சமூகத்தின் உணர்வுகளை சுமக்கும் பார்வை.

வடமலேசியத் தமிழ்ச் செய்தியாளர்கள் சங்கம் நடத்திய விழாவில், ஊடகத் துறையில் பங்களிக்கின்ற இவர்களின் உண்மையான நிலை, அவசரத் தோழமையுடனும், சவால்கள் நிறைந்தது என்று அவர் சொன்னார் .

மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பினாங்கு மாநில குற்றச் செயல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைவர் டத்தோஸ்ரீ கா. புலேந்திரன், மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் பொருளாளர் ஆறுமுகம், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மூத்த அரசியல்வாதி இராமன், சிங்கப்பூர் சட்ட சமூக சேவையாளர் டாக்டர் சின்னையா, பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

டத்தோஸ்ரீ புலவேந்திரன் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்கள், செய்தியாளர்கள் பல்வேறு இயற்கை மற்றும் சமூக சவால்களைக் கடந்து பணி புரிவதைப் புகழ்ந்தனர்.

ஆனால் பாதுகாப்பும், தொழில்முறை உரிமைகளும் இல்லாத சூழலில் அவர்கள் உழைப்புக்கு நியாயம் கிடைப்பதில்லை என்பது அனைவரையும் கவலையடையச் செய்தது.
இவ்விழா, ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வை கூட்டும் நிகழ்வாக அமைந்தது. செய்தியாளர் என்பது ஒரு தொழிலல்ல, அது ஒரு பணி. அந்த பணிக்குரிய மதிப்பும் பாதுகாப்பும் அரசு, தனியார் மற்றும் பொதுமக்களிடமிருந்து உறுதியாக இருக்க வேண்டிய கட்டாயம், நிகழ்வின் முக்கிய கருத்தாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles