வட மலேசிய தமிழ் நிருபர்கள் சங்கத்தின் விருதளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு கெளரவிப்பு!

செபெராங் பிறை மே 17-
வட மலேசிய தமிழ் நிருபர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

பினாங்கு லைட் ஹோட்டலில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவை வட மலேசிய தமிழ் நிருபர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் சடையன் – செயலாளர் எம்ஜிஆர் தேவன் ஏற்பாடு செய்தனர்.

பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ இந்த விழாவுக்கு தலைமை ஏற்று அனைவருக்கும் சிறப்பு செய்தார்.

அந்த வகையில் மலேசியா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தமிழ் லென்ஸ் நிருபர் காளிதாஸ், சங்கத்தின் உதவித் தலைவரும் மலேசிய நண்பன் நிருபருமான ஜீவா ராஜா, தமிழ் லென்ஸ் ஆசிரியர் – சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர், தமிழ் லென்ஸ் நிருபர் – சங்கத்தின் உதவித் தலைவர் காளிதாஸ் இளங்கோ ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

பினாங்கு மாநில மக்கள் ஓசை நிருபர் குணாளன், தமிழ் தமிழ் நிருபர் ரமணி, மக்கள் ஓசை நிருபர் முருகையன், தமிழ் மலர் மெத்தியூஸ், வெளிச்சம் கணபதி, பெர்னாமா ரச்சா, பிரிதிப் , வீரா மணியம், எம்ஜிஆர் சிங்கப் பெண்ணே ஆகியோரும் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது .

பினாங்கு மாநில குற்றச் செயல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைவர் டத்தோஸ்ரீ கா.புலேந்திரன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் பொருளாளர் ஆறுமுகம் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles