90 ஆயிரம் வெள்ளி ரொக்கப் பரிசு கொண்ட BRITISH POOL SNOOKER – 8 BLACK BALL SUPER CUP போட்டி!

சுபாங், மே 17-
2025ஆம் ஆண்டுக்கான 8 BLACK BALL SUPER CUP போட்டி வரும் ஜூன் 9ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் கிள்ளான் பள்ளத்தாகில் நடைபெறவுள்ளது.

தேசிய அளவிலான 8 BLACK BALL SUPER CUP போட்டியை KSS SPORTS & EVENTS MANAGEMENT ஏற்று நடத்துகிறது.

இந்த SNOOKER விளையாட்டின் மூலமாக நாட்டிலுள்ள இளைஞர்களை அடையாளம் காணவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை உருவாக்கவும் உறுதுணையாக இது அமையும் என்று KSS SPORTS & EVENT MANAGEMENT தலைவர் SAM தெரிவித்தார்.

நேற்று 8 BLACK BALL SUPER CUP 2025 அறிமுக விழாவில் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவின் சிறப்பு செயற்குழு தலைவரான பி.பிரபாகரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள 300 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த 8 BLACK BALL SUPER CUP போட்டிக்கு MALAYSIA SNOOKER & BIILIARDS FEDERATION (MSBF) முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியதாக MR.SAM கருத்துரைத்தார்.

21 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். ROUND ROBIN FORMAT விளையாட்டு முறையில் அவர்கள் விளையாடுவார்கள்.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் டிவிஷன் 1 சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிவிஷன் 1 பிரிவில் வெற்றியாளர்களுக்கு 35,000 வெள்ளி ரொக்கப் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது.

எஞ்சிய அணிகள் டிவிஷன் 2 சுற்றிலும் விளையாடுவர்கள். டிவிஷன் 2 சுற்றில் வெற்றிப்பெறும் அணிக்கு 18 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப்பணம் வழங்கப்படும்.

மேலும், ஒற்றையர், இரட்டையர் சுற்றில் வெற்றிப்பெறும் வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.

8 BLACK BALL SUPER CUP போட்டியின் முதன்மை ஆதரவாளர்களாக THE FLAME BAR திகழ்கின்றனர்.

HIGH SOCIETY BISTRO , GM RO WATERS நிறுவனமும் இணைந்து இப்போட்டிக்கு ஆதரவு அளித்துள்ளன.

இந்த போட்டிக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles