
கோலாலம்பூர் மே 16-
இலக்கவியல் (டிஜிட்டல்) உள்ளடக்கத்தின் வழி நாடு பன்மடங்கு வருமானம் ஈட்ட சீன பெரு நிறுவத்துடனான ஒத்துழைப்பு வழி கோலும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மலேசிய இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகம் மற்றும் சீனா இன்டர்நேஷனல் கேப்பிட்டல் கார்ப்பரேஷன் (CICC) கேப்பிட்டல் மானேஜ்மெண்ட் கம்பனி (CICC Capital) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், “சீனா-மலேசியா கேம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க நிதி” என்ற USD100 மில்லியன் அளவிலான நிதி உருவாக்கப்பட உள்ளது என கோபிந்த் தெரிவித்தார்.
2011 முதல் 2023 வரை மலேசியாவின் டிஜிட்டல் உள்ளடக்கத் துறையின் மொத்த வருமானம் RM87.25 பில்லியன், ஏற்றுமதி RM11.18 பில்லியன் மற்றும் முதலீடுகள் RM80.26 பில்லியன் என பதிவாகியுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.