

மலாய்காரர் அல்லாத பிரிவான சாயாப் பெரிக்கத்தான் நேஷினால் பிரிவுக்கு முன்னாள் ஜசெக உறுப்பினருமான திரு சந்திரசேகரன் ஆறுமுகம், கடந்த சனிக்கிழமை லாபிஸில் பலநேக்கு மண்டபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல நிகழ்வின் போது,அந்த நியமனச் சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்பட்டார்.
ஜொகூர் மாநிலத்தில் மலாய்காரர் அல்லாத இந்த பிரிவின் தலைவர் டத்தோ தான் லேக் காங் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திறந்த இல்ல நிகழ்வில், தேசிய தலைமை செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்ஜா ஜைனுடின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, அவர் மலாய்காரர் அல்லாதவர்களின் தற்போது அதிக அளவில் கட்சியில் இணைவது கண்கூடாக பார்க்க முடிகிறது எனவும், இந்தக் கட்சியின் மீது இந்திய மற்றும் சீன சமூகத்தினரிடையே நம்பிக்கை உருவாகியுள்ளது என்பதைக் பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் 24 ஆம் தேதி, மாநில தலைவரான டத்தோ தான் லேக் காங் தலைமையிலான ஒரு சந்திப்பில்,திரு சந்திர சேகரனை கூலாய் தொகுதியின் மலாய்காரர் அல்லாத பிரிவின்(சாயாப்) தலைவராக நியமிக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
சுமார் 2000க்கும் அதிகமனேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், தேசிய மற்றும் மாநில உச்ச மன்ற தலைவர்கள்,பொது மக்கள்,உதவி தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

