போலீஸ்காரர்கள் போல் நடித்து வீட்டில் கொள்ளையிட்ட நான்கு நபர்கள் கைது!

கோலாலம்பூர், மே 28 – செமினியில் இம்மாதத் தொடக்கத்தில் போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து ஒரு வீட்டில்  கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.15 மணி முதல் மாலை 5.32 மணி வரை டெங்கில், புக்கிட் பூச்சோங், புக்கிட் ராஜா மற்றும் கிள்ளான் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  33 முதல் 38 வயதுடைய நான்கு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

​​கொள்ளையின் போது  பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒரு மஞ்சள் நிற பெரோடுவா மைவி கார், மூன்று கைப்பேசிகள் மற்றும் சில உடைகளை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles