‘புடின் முழு பைத்தியமாகி விட்டார்’: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்!

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடின், முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம் அடைந்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. ஆனால் தேவையில்லாமல் ஏராளமான மக்களை அவர் கொன்று குவிக்கிறார். எந்தவித காரணமும் இன்றி, உக்ரைன் நகரங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்.

அவருக்கு முழு பைத்தியம் பிடித்துவிட்டது. புடின், உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற நினைத்தால், அதுரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் பேச்சு மற்றும் செயல்கள் வாயிலாக, அவரது நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே பிரச்னைகளையே ஏற்படுத்துகிறது. எனக்கு அது பிடிக்கவில்லை;அதை அவர் நிறுத்துவது நல்லது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்காது. இது ஜெலன்ஸ்கி, புடின், பைடன் ஆகியோரின் போர்; டிரம்பின் போர் கிடையாது. மிக மோசமான தாக்குதல்களை நிறுத்துவதற்கான உதவிகளை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles