
புதுடில்லி: நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 68 பேருக்கு, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
முதல்கட்டமாக 71 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கிய நிலையில், இன்று 2வது கட்டமாக 68 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த முறை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில் 23 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களில், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.