
கோலாலம்பூர் ஜன 29–
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மலேசிய திருநாட்டில் முருகன் திருத்தலத்தில் தைப்பூசம் திருவிழா கலை கட்டியிருக்கும்.
பக்தி நெறியோடு தைப்பூசத்தை கொண்டாடி மகிழ்வோம்.அதே சமயம் சுத்தத்தை பேணுவோம் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் மாண்புமிகு
கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.

