




கோலாலம்பூர் ஜன 30-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தார்.
அவருக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.
டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா அவர்கள் பிரதமருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன், ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன், ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் , சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தைப்பூச ஏற்பாடுகள் குறித்து பிரதமருக்கு டான்ஸ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.
பின்னர் பத்துமலை திருத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அவர் பார்வையிட்டார்.
தைப்பூச திருவிழா அமைதி மற்றும் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

