
கோலாலம்பூர், ஜன 29-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் மலேசியத் திருநாட்டில் புகழ்பெற்ற பத்துமலை, பினாங்கு , ஈப்போ, கோல் சிலாங்கூர் உட்பட முருகன் திருத்தலத்தில் தைப்பூசம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது..
தைப்பூச திருவிழா வினீ போது சுத்தத்தை பேணி காக்கும் நோக்கில் தூய்மையாக தைப்பூசம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று பார் எனப்படும் மலேசிய மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ ஆர்.சந்திர குமணன் தெரிவித்தார்.
தூய்மையான தைப்பூசம் என்பது.
வெறும் சுத்தத்தை மட்டும் அல்லாமல், நீண்டகால சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி உறுதியான முன்னேற்றத்தை குறிக்கிறது என்று அவர் கூறினார்.
க்ளீன் தைப்பூசத்தின் தாக்கம் ஏற்கனவே தெளிவாக காணப்படுகிறது.. பார் மலேசிய கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தூய்மையான தைப்பூசம் திட்டத்தை முன் எடுத்தது.
இன்று பல அமைப்புகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன் . மக்கள் மனது வைத்தால் தூய்மையான தைப்பூசத்தை காண முடியும்.
ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசாமல் குப்பை தொட்டியில் குப்பைகளை போடும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

