
பத்துமலை, ஜன 31-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை திருத்தல வளாகத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் தைப்பூசத் திருவிழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
பத்துமலை மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்படும் மேடையில் சிலாங்கூர் மாநில அரசின் தைப்பூசத் விழா நடைபெறுகிறது.
இரவு 8.00 மணிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இந்த விழாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50 கோவில்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி அவர்கள் நேரடியாக 50 கோவில்களுக்கு மானியத்தை வழங்கி சிறப்பிப்பார்.
சமய பக்தி நெறியோடு நடைபெறும் இந்த விழாவில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழாவில் சிலாங்கூர் மாநில அரசு இந்து கோவில்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

