



செமினி, மே 29-
சிலாங்கூர் மாநில கோஜூகாய் 8 ஆவது கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி மே 25 ஆம் தேதி செமினி சமூக மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில கோஜூகாய் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜெ.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
உலு லங்காட் டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வீரா ஜோகானின் சிறப்பு அதிகாரி முகமட் நோர் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இளம் வயதிலேயே மாணவர்கள் தங்களை கராத்தே போன்ற விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்துவதை அவர் வெகுவாக பாராட்டினர்.
மேலும் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்திய சிலாங்கூர் மாநில கோஜூகாய் கராத்தே சங்கடத்தையும் அவர் வெகுவாக புகழ்ந்தார்.
சிலாங்கூர் மாநில கோஜூகாய் கராத்தே சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்செய் எஸ்.பிரபாகரன் போட்டியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோம்பாக் மாவட்ட கோஜூகாய் கராத்தே சங்கத்தின் தலைவர் சென்சாய் வி.செல்வநாதன் உட்பட பலரும் இந்த போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.

