ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முன்னுரிமையும் முக்கியதுவமும் வழங்குவோம்- வ.சிவகுமார்

பத்துகாஜா, ஜுன்.4: வரும் ஜூலை 6, 2025 அன்று நடைபெறும் பூசிங் தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவமனை (KKIA) ஏற்பாடு செய்துள்ள சுகாதார தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சமூகத்தில் இணைவதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த திட்டம் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, பத்து கஜா சமூகத்தினரிடையே, குறிப்பாக பூசிங் மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை அதிகரிப்பதற்கான ஒரு பெரிய படியாகும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

இந்த மருத்தவ முகாமில் பல வகையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அவற்றில் ஏரோபிக்ஸ், சுகாதாரம் குறித்த உரைகள், இலவச பரிசோதனைகள், ஆலோசனை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சிகளும் இடம் பெறுகின்றன. அதோடு பல்வேறு செயல்பாடுகளுடன் இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்தைத் தொடும் ஒரு முழுமையான நிகழ்வாகும் என்று அவர் கருத்துரைத்தார்.

பத்துகஜாவின் நாடாளுமன்ற உறுப்பினராக, இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரிக்கிறேன். இத்திட்டத்திற்கு10்ஆயிரம் ரிங்கிட்டை நன்கொடையாக அளித்துள்ளேன். ஏனெனில் ஆரோக்கியம் ஓர் அவசியமான பங்கு வகிக்கிறது. இது மகிழ்ச்சியான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் கலந்து கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் – வெறும் சுகாதாரப் பரிசோதனைக்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான, அதிக அக்கறையுள்ள மற்றும் ஒன்றுபட்ட சமூக வலையமைப்பை உருவாக்கவும் இந்த நடவடிக்கைகள் உதவுகின்றன என்று அவர் உறுதியாக கூறினார்.

ஆரோக்கியம் என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு. விழிப்புணர்வு, ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles