15 மாணவர்கள் பலியான கோர விபத்து! 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு

ஈப்போ, ஜூன் 11- விபத்தில் சிக்கிய உப்ஸி மாணவர்கள் உட்பட பல தரப்பினரை உள்ளடக்கிய 18 சாட்சிகள் இதுவரை தங்கள் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக பேராக் மாநிலக்  காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

கிரீக், கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில்  பானுன் அருகே,  உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று விடியற்காலை பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தின் போது அந்த  வாடகைப் பேருந்து திரங்கானுவின் கெர்த்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles