


கோலாலம்பூர், ஜூன் 12-
இணைய பகடிவதை சம்பங்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மித்ரா மூலம் 500 பள்ளிகளில் இணைய பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அறிமுக விழா இன்று தலைநகரிலுள்ள தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது. இத்திட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் (கூட்டர பிரதேசம்) டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தப்பா தொடக்கி வைத்தார்.
இத்திட்டமானது 9 மாநிலங்களைச் சேர்ந்த 200 தமிழ்ப்பள்ளி மற்றும் 300 இடைநிலைப்பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழி சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என மித்ரா அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு பயிற்ச்சி ஒரு நாள் முழுவதும் நடைப்பெறும். பயிற்ச்சி பெற்ற மாணவர்கள் அந்த அந்த பள்ளிகளில் தூதராக செயல்படுவர். இணைய பகடிவதைக்குள்ளாகும் மாணவர்கள் அந்த பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களிடம் புகார் செய்யலாம். அவர்களுக்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படும் என அவர் சொன்னார்.
இத்திட்டத்தின் வழி மாணவர்கள் இணைய பகடிவதையில் சிக்காமல் இருப்பதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களை முறையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்து எப்படி என்பது மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும் என பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் தெரிவித்தார்.

