ஈப்போவில் துன் வீ தி சம் பத்தனின் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

ஈப்போ, ஜுன்.12: மலேசிய சுதந்திர தந்தைகளில் ஒருவரும், ம இ கா வின் முன்னாள் தேசிய தலைவருமான மறைந்த துன் வீ. தி.சம்பந்தனின் 106 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 16.6.2025( திங்கட்கிழமை) மாலை மணி 5.30 க்கு, புந்தோங் ஜாலான் சுங்கை பாரியில் அமைந்துள்ள குங்குமாங்கி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் மணி இரா.மாணிக்கம் கூறினார்.

இம்முறை இந்நிகழ்வினை டத்தோ பி.கமலநாதன் முன்னாள் கல்வி துணையமைச்சர் தலைமை ஏற்கிறார். அவருடன் மறைந்த துன் வீ.தி.சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. இவ்வட்டாரத்திலுள்ள பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles