அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேர் பரிதாப மரணம்!


அகமதாபாத், ஜூன் 12-
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக அமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர், விபத்து நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் கூறுகிறார். மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.

அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 இருந்தனர்” என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles