திமுக, அதிமுக வேட்பாளர்கள், கமல் போட்டியின்றி தேர்வு: அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் பதவியேற்பு

தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் 6 பேரும் எம்பிக்களாக பதவியேற்பார்கள். 

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர்கள் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய எம்பிக்களாக பதவியேற்றுக்கொள்வார்கள். இவர்களின் பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles