
துபாய்: ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரபு நாடுகள், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ஈரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஈரானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இஸ்லாமிய புரட்சிப்படை கமாண்டர், விமான பாதுகாப்பு படை கமாண்டர் அமிர் அலி ஹஜிஹாதே உட்பட 20 க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

