

கோலாலம்பூர் ஜூன் 14-
நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மூன்று கோடி வெள்ளி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்கள் டிஜிட்டல் எனப்படும் செயற்கை நுண்ணறிவு உருமாற்றத்தை செயல்படுத்துவது மற்றும் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் உதவுவதற்காக இந்த மூன்று கோடி வெள்ளி RM30 ஒதுக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
செய்தியாளர்களின் ஆற்றலும் தயாரிப்பும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்ததற்கு நான் பொறுப்பு. உங்கள் செய்திகள் சிறப்பாக இருப்பதால் நான் உங்களை வலுவாக ஆதரிக்கிறேன்.
இது தொடர்பில் தகவல் தொடர்பு துறை அமைச்சவுடன் பேசினேன். அந்த வகையில் ஊடக நிறுவனங்களுக்கு உதவ இந்த பெரிய நிதியே ஒதுக்க முன் வந்ததாக அவர் சொன்னார்.
இன்று உலக வாணிப மையத்தில் 2025ஆம் ஆண்டுக்கானசெய்தியாளர்கள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை வகித்தார்.
தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பட்சில் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உரையில் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கிய நிதியில் இதுவே அதிகமானது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

