
சிரம்பான், ஜூலை 9-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட்டிற்கு நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறார்.
அந்த வகையில்
பள்ளி வாரியக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் (PIBG) இணைந்து மம்பாவ் லாடாங் ஷாங்காய் பள்ளி நிர்வாகம் பள்ளியில் 2 பாலர் பள்ளி வகுப்புகளை கட்டி முடித்துள்ளனர்.
இந்த முயற்சிக்கு ஆதரவாக நெகிரி செம்பிலான் மாநில அரசிடம் இருந்து RM 20,000 நிதியை அருள் குமார் பெற்றுத் தந்தார்.

பாலர் பள்ளி வகுப்புகள் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அது எதிர்காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அப்பள்ளியில் குறையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்.
அந்த வகையில் இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த பாலர் பள்ளி வகுப்பறைகள் பெரிதும் உதவும் என்றார் அவர்.

