

பிறை ஜூலை 28-
பிறை எம்பிபிகே ஆதரவில் ஸ்ரீனேஷ் பியூட்டி கேர் நடத்திய உங்களை செம்மைப்படுத்துங்கள் (Personal Grooming) மற்றும் ஒப்பனை பயிற்சி பட்டறை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிறை எம்பிபிகே பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் பணியகம் ஏற்பாடு செய்த இந்த பயிற்சி பட்டறையில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஸ்ரீனேஷ் பியூட்டி கேர் நடத்திய இந்த அதிகாரமளிக்கும் பட்டறை பட்டறை கடந்த ஜூலை 26, 2025 ஆம் தேதி பிறை, தாமான் சாய் லெங்கில் உள்ள JBPP அலுவலகத்தில் நடைபெற்றது.

பிறை கவுன்சிலர் திரு. பொன்னுதுரை மற்றும் சமூக அடிப்படையிலான பெண்கள் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஊக்கம் மற்றும் ஆதரவு வழங்கி வரும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ ஆகியோருக்கு பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பாளர்களுக்கு RM150 மதிப்புள்ள இலவச ஒப்பனை கிட், பாடநெறி கையேடு, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் நாள் முழுவதும் இலவச மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட ஒப்பனை அடிப்படைகள் & சுகாதாரம்,
முக வடிவம், நீளத்தின் அடிப்படையில் சிகை அலங்காரம், பின்னல், கர்லிங் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.
இந்த ஒப்பனை பயிற்சி பட்டறை சம்பந்தப்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஒரு வெற்றிகரமான மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வாக விளங்கியது.
JBPP Perai மண்டபத்தை இலவசமாக வழங்கியதற்கு ஸ்ரீ சங்கர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அழகை மேம்படுத்துதல், நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது இந்த பயிற்சி பட்டறையின் முக்கிய நோக்கமாகும் என்றார் அவர்.

