
பெந்தோங், ஜூலை 28-.
பகாங் மாநில பெந்தோங் மஇகா தொகுதி மற்றும் தாமான் டேசா டாமாய் கிளை ஏற்பாட்டில் நட்பு முறை கால்பந்து போட்டி கடந்த வாரம் இறுதியில் பெந்தோங் ஜாலான் தெராஸ் திடலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ரோயல் சிலாங்கூர் கிளப் வெட்ரன் மற்றும் பெந்தோங் வெட்ரன் கிளப் இதில் பங்கேற்றது. பெந்தோங் மஇகா தொகுதி காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஜெயந்திரன் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க இந்த போட்டி ஒரு உறவு பாலமாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டி சிறப்பாக நடைபெற பெந்தோங் மஇகா தொகுதி காங்கிரஸ் முழு ஆதரவை வழங்கியது.
இனி வரும் காலங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஏராளமான போட்டியில் நடத்தப்படும் என்று டாக்டர் ஜெயந்திரன் தெரிவித்தார்.

