காலணி டிசைன் பிரீனியர் திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு பட்டமளிப்பு விழா!

ஷா ஆலம், 28 ஜூலை 2025

ஜூலை 20 ஆம் நாள் காலணி டிசைன் பிரீனியர் திட்டம் நடைபெற்றது. அதன் நிறைவு விழாவாக  இன்று SHRDC ஷா ஆலமில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு காலணி வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சியையும் வழங்கப்பட்டது.

இதன் வழி பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த தயாரிப்புகள் அல்லது வணிகங்களைத் தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிறைவு விழாவில் SHRDC இன் பொது மேலாளர் திருமதி.மஸ்லினா,  மனிதவள அமைச்சர்  ஸ்டீவன் சிம் பிரதிநிதியாக திரு. டிக்காம் லூர்து இருவரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் பங்கேற்பாளர்கள் தங்களின்  இறுதி வடிவமைப்புகளை காட்சிபடுத்தினர். சிறந்த  வடிவமமைப்புகளுக்கு  பாராட்டுகளும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சி படைப்பாற்றல் துறையில் திறமை வளர்ச்சிக்கான திறனை நிரூபித்தது மற்றும் பங்கேற்பாளர்கள் காலணி வடிவமைப்பு மற்றும் வணிக உலகில் மேலும் முன்னேறுவதற்க்கு ஊக்கமாகவும் விளங்குகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles