13 ஆவது மலேசிய திட்டம்! இந்திய தொழில் முனைவோருக்கு திருப்பு முனையாக அமையும் என்கிறார் ஹேமலா புத்ரி சிவம்!

கோலாலம்பூர்: ஆக 2-
13ஆவது மலேசியத் திட்டம் இந்திய தொழில் முனைவோருக்கு திருப்புமுனையாக அமையும் என்று
மைக்கி மகளிர் பிரிவுத் தலைவத் ஹேமலா புத்ரி சிவம் நம்பிக்கையை தெரிவித்தார்.

13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த 13ஆவது மலேசியா திட்டத்திற்கு என்னுடைய வலுவான ஆதரவை வழங்குகிறேன்.

மேலும், இது இந்தியப் பெண்கள், தொழில்முனைவோரை தேசிய முன்னேற்றத்தின் மையத்தில் இறுதியாக வைக்கும் ஒரு துணிச்சலான முன்னோட்டமாகும்.

13ஆவது திட்டம் என்பது வெறும் கொள்கை ஆவணம் மட்டுமல்ல.

நமது நாட்டின் முன்னோக்கிய பயணத்தில் எந்த சமூகமும், எந்தப் பெண்ணும் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்பதற்கான மதனி அரசாங்கத்தின் தெளிவான சமிக்ஞையாகும் என்று ஹேமலா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் குறிப்பாக பி40, அதறகும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின் திறனைத் திறப்பதற்கு இன்றியமையாத திவேட், ஸ்டேம், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை அவர் பாராட்டினார்.

இந்திய சமுதாயத்தில் பெண்கள் பலத்தின் தூண்கள்.

பலர் ஏற்கனவே மைக்ரோ, வீட்டு அடிப்படையிலான வணிகங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் 13ஆவது மலேசியத் திட்டம் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles