
தைப்பொங்கலை கேவலப்படுத்தும் வகையில் ஜே.சி.பி. tractor பேக்கேட் மற்றும் பீர் ஊற்றி பொங்கல் வைத்த சம்பவங்கள் சமுதாயத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத்தை கேவலப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட தரப்பினர் நடவடிக்கையால் ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கி தலைக் குனிகிறது என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் இன்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தைப்பொங்கலின் உன்னதமான அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
நாமே நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தலாமா.
மற்ற இனத்தவர்கள் நம்மை பார்த்து ஏன் ஏளனமாக பார்க்க மாட்டார்கள்.
ஒரு சமுதாயத்தை கேவலப்படுத்தும் இதுபோன்ற செயல்களை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
கலாச்சாரத்தையும் சமுதாயத்தையும் கேவலப்படுத்தும் தரப்பினர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

