
முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸுக்கு எதிராக அரச விசாரணை கமிஷன் எதற்கு என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி இன்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
இவர் எழுதிய புத்தகம் தொடர்பில் விசாரணை நடத்த சிறப்பு குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை குழு இருக்க பின்னர் எதற்காக அரச விசாரணை கமிஷன்.
இது பழிவாங்கும் செயலா என்று டாக்டர் இராமசாமி கேள்வியை எழுப்பினார்.

