தைப்பொங்கலை நாமே கேவலப்படுத்தி னால் மற்ற இனத்தவர்கள் நம்மை பார்த்து காரி துப்புவார்கள்! மீரா கட்சி தலைவர் டத்தோ சந்திரகுமணன் ஆவேசம்

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய உன்னத பெருநாள். இன்று பல நாடுகளில் மற்ற இனத்தவர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து தைப்பொங்கலை கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் தைப்பொங்கலை
கேவலப்படுத்தும் வகையில் இப்போது மலேசிய திருநாட்டில் நமது தமிழர்கள் கீழ்த்தரமான மற்றும் கேவலமான செயலில் இறங்கி இருப்பது மிகவும் கண்டித்தக்கது என்று மீரா கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.

மண்வாரி இயந்திரத்தின் பேக்கெட்டில் பொங்கலை வைத்த வேளையில் இப்போது பொங்கல் பானையில் பீர் ஊற்றி பொங்கல் வைத்த காட்சிகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தைப்பொங்கல் விழாவை கேவலப்படுத்தும் இவர்களின் கேவலமான செயலால் தமிழ் சமுதாயமே வெட்கி தலை குனிந்து நிற்கிறது.

தமிழ் சமுதாயத்தின் பெயரை கொடுக்க வந்த நாதாரி கள் என்று டத்தோ சந்திரகுமணன் கடுமையாக சாடியுள்ளார்.

தைப்பொங்கலை நாமே கேவலப்படுத்தினால் மற்ற இனத்தவர்கள் ஏன் நம்மை பார்த்து காரி துப்பு மாட்டார்கள் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles