6 துண்டுகளாக வெட்டப்பட்ட ஆடவரின் சடலம்! போலுசார் தீவிர விசாரணை

ரவாங் சவுத் எக்சிட் அருகே வடக்கு தெற்கு விரைவுச் சாலையின் ஓரத்தில் நேற்று மனித உடல் உறுப்புகள் அடங்கிய கருப்பு லக்கேஜ் பை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பேக்கில் ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட மனித உடல்கள் இருந்தன

நாட்டை உலுக்கிய இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று சுங்கை பூலோ மாவட்டக் காவல்துறை தலைவர் ஷஃபாடன் அபு பக்கர் தெரிவித்தார்.

காவல்துறையின் பரிசோதனையில் லக்கேஜில் தலை மற்றும் இரு கைகள் இல்லாமல் துண்டிக்கப்பட்ட பல உடல் பாகங்கள் (தோள் முதல் இடுப்பு வரை) இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்டவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles