
மலேசியாவில் நிலவும் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியா, தாய்லாந்து, கம்போடியா உட்பட 15 நாடுகளில் இருந்து தொழிலாளர்களைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
இவர்களுக்கு முதலில் தற்காலிக வேலை பெர்மிட் வழங்கப்பட்டு, 6 மாத காலத்தில் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்நிய தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகள் செலுத்த வேண்டும்.
மேலும் அந்நியத் தொழிலாளர்கள் சொந்த நாட்டிலிருந்து மலேசியா புறப்படுவதற்கு முன்னரே சுகாதாரப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

