
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யோ அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சுக்மா 2026 ஆண்டு விளையாட்டு போட்டியில் சிலம்பத்தை சேர்த்து கொள்ளப்படாது என அறிவித்தது திட்டமிட்ட புறக்கணிப்பு என சமூக ஆர்வலரான சந்திர சேகரன் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த கோல குபு இடைத் தேர்தலின் போது சிலம்பம், கபடி போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் சுக்மா எனபடும் ஆண்டு தோறும் நடைபெறும் மலேசியா விளையாட்டு போட்டியில் சேர்த்து கொள்ளப்படும் என அறிவிப்பு செய்துவிட்டு,இன்று பல்டி அடிப்பது ஏன் என பெரிக்கத்தான் நேசினால் ஜொகூர் மாநில இந்தியர் அல்லாத பிரிவின் உச்சமன்ற உறுப்பினருமான அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும்,அவர் தனது அறிக்கையில் இந்திய சமுதாயத்தை நம்ப வைத்து ஏமாற்றிய இந்த செயலை விளையாட்டு சார்ந்த இயங்கங்கள் மற்றும் இந்திய அமைப்புகள் ஒன்று திரண்டு திருமதி ஹன்னா யோ ராமசந்திரனின் இச் செயலை கண்டித்து மாபெரும் கண்டன பேரணியை நடத்த தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

