சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில்
ரவாங் தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் கலை பண்பாட்டுக் கலை விழா

தித்திக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு சார்பில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி மாலை 7.00 மணிக்கு மேல் ரவாங் தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மாபெரும் அளவில் தைப்பொங்கல் பண்பாட்டுக் கலை விழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் நடைபெறும் இந்த தைப்பொங்கல் விழாவில் பலர் ஒன்று கூடி பொங்கல் வைப்பார்கள்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், ரவாங் தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் டத்தோ சுரேஷ் ராவ், செலாயாங் கவுன்சிலர் ஏண்டி, உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப. புவனேஸ்வரன் உட்பட கிராமத் தலைவர் பாலச்சந்தர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles