என்னை ஒரு இசையமைப்பாளராக
அடையாளம் கொடுத்த
மலேசியாவுக்கு நன்றி!
இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சி

என்னை ஒரு இசையமைப்பாளராக உலகத்திற்கு அடையாளம் காட்டிய மலேசியாவுக்கு நன்றி என்று திரைப்பட முன்னணி இசையமைப்பாளர்ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

மலேசிய மக்கள் தனது பாடல்களை ரசித்து மகிழ்ந்த விதம் தனக்குத் தனி உத்வேகத்தை ஏற்படுத்தியதாகவும் இதுவே இன்று தான் இந்த அளவுக்கு உயரக் காரணம் .

வரும் சனிக்கிழமை தலைநகரில் நடைபெறவிருக்கும் “ஹார்ட் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியை கலக்க இவர் மலேசிய வந்திருக்கிறார்.

“நான் இசையுலகில் முத்திரை பதிக்கக் காரணமானவர்கள் மலேசிய மக்கள்.

இவர்களின் அன்புக்குப் பிரதிபலனாக இந்நிகழ்ச்சி வழி நல்லதோர் இசை விருந்தைக் கொடுக்க விரும்புகிறேன் என்றார்.

மாலிக் ஸ்டிரிம் டத்தோ மாலிக் ஏற்பாட்டில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles