
செயலிழந்த தேசிய கல்வி ஆலோசனைக் குழுவின் (NEAC) மறுமலர்ச்சி இன்றைய காலக் கட்டத்தில் முக்கியமான ஒன்று என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
நலிந்து கிடக்கும் கல்வி முறையில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.
தேசிய கல்வி ஆலோசனைக் குழுவின் முந்தைய செயல்திறனைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.
இது அநேகமாக வெறும் ஜன்னல் அலங்காரமாக இருக்கலாம்.
பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு இடமாக இருக்கலாம்.
சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட கல்விக் கொள்கைகளில் இது அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவதற்கு எந்தப் பதிவும் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

