புத்ராஜெயா ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம் கட்டுவதற்கான உதவிகளை நிச்சியம் செய்வேன்!
துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு

புத்ராஜெயா ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம் கட்டுவதற்கான உதவிகளை நிச்சியம் செய்வேன் என்று தொழில் முனைவோர் கூட்டுறவு துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

புத்ராஜெயாவில் லலிதாம்பிங்கை தாய்க்கு ஆலயம் அமைவது என்பது மிகவும் அற்புதமான விஷயமாகும்.

ஆனால், இந்த ஆலயத்தின் கட்டுமான பணி பல ஆண்டுகளாக இழுப்பறியாக இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.
என் பதவி மூன்று ஆண்டுகள் கூட இருக்கலாம். எது எப்படியிருந்தாலும் இந்த ஆலயத்தை கட்டி முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்.

இது எனது இலக்கு என்று புத்ராஜெயா அரசு பணியாளர்களின் சங்கமான இமையத்தின் ஏற்பாட்டிலான பொங்கல் விழாவிற்கு தலைமையேற்ற சரஸ்வதி கந்தசாமி மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles